கிருஷ்ணகிரி அடுத்த கங்கசந்திரம் கிராமப்பகுதியில் ஒரு ஆட்டுக்குட்டி தலையில்லாமல் முண்டமாக காது மட்டும் உள்ள நிலையில் இறந்து பிறந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பெத்த சிகரளபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கசந்திரம் கிராமப்பகுதியில் சந்திரபா வயது (60) இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்து விவசாயத்தையும் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு நேற்று முன்தினம் குட்டி ஈன்றது. பிறந்த ஆட்டுக்குட்டி தலை மற்றும் முகம் அமைப்பு இல்லாமல் முண்டமாக இறந்த நிலையில் பிறந்துள்ளது. விசித்திரமாக இறந்த நிலையில் பிறந்த ஆட்டுக்குட்டியை உரிமையாளர் தனக்கு சொந்தமான இடத்திலே புதைக்கப்பட்டது.