தருமபுரி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 5 வது மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தகவல்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது தருமபுரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 16 லட்சத்து 12 ஆயிரத்து 285 பேர் உள்ளதாகவும், இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 12 லட்சத்து 3 ஆயிரத்து 3 பேர் தகுதியுடையவர்களாக உள்ளனர். இதில் 7லட்சத்து 8 ஆயிரத்து 262 பேர் முதல் தவணையும், 1 லட்சத்து 94 ஆயிரத்து 758 பேர் இரண்டாவது தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும், இது மாவட்டத்தில் 59 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும், மாவட்டத்தில் தற்போது 97 ஆயிரத்து 810 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.
வருகிற 10 ந் தேதி நடைபெரும் 5 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சம் பேருக்கு இரக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. குறைவாக தடுப்பூசி செலுத்திய 84 இடங்கள் கண்டறியபட்டுள்ளது என்றும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி சுகாதார துறையினர், வருவாய் துறையினர் வீடு வீடாக சென்று அவர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளதாகவும், மேலும் நாளை மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.