அரூர் அரசு மகளிர் பள்ளிக்கு தமிழக முதல்வர் படம் அளிப்பு.
அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவுருவ படத்தினை திமுகவினர் வழங்கினர். அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அலுவலகத்தில் வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தினை நகர பொறுப்பாளர் ஏ.சி.மோகன் தலைமையில் திமுகவினர் வழங்கினர். இதில், பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.எம்.ராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ரவிக்குமார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், தலைமை கழக பேச்சாளர் மணி, மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.திருவேங்கடம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.