சிறுபான்மையினரை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மனு.
அபார்ட்மென்ட்டுகளில் வேலை செய்யும் சிறுபான்மையினரை அவமதிப்பவர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தர்மபுரி மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஹரிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பெருநகரத்தில் உள்ள அபார்ட்மென்ட்டுகளில் குடியிருப்பவர்களுக்கு மெயின்டனன்ஸ் கட்டணத்திற்கு உரிய ரசீது வழங்க வேண்டும்.
அபார்ட்மென்ட்டுகளில் வேலை செய்யும் சிறுபான்மையினரை அவமதிப்பவர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.