நேரு யுவ கேந்திரா - தருமபுரி மாவட்டம் சார்பில் இந்தி தின விழா கொண்டாடப்பட்டது.
இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமான, நேரு யுவ கேந்திரா - தருமபுரி மாவட்டம் மற்றும் பிடமனேரி டாக்டர் APJ அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இருவார இந்தி விழா ( Hindi Pakhwada Fortnight ) மற்றும் இந்தி தின விழாவானது ( Hindi Diwas ) தருமபுரி செட்டிக்கரை கேந்திரியா வித்யாலயா பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் நிகழ்ச்சி மேற்பார்வையாளர் திரு.G.வேல்முருகன் தலைமை இந்தி தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கேந்திரியா வித்யாலயா பள்ளியின் பொறுப்பு முதல்வர் திரு.S. சண்முகம் மற்றும் முதுநிலை ஆசிரியர் திரு. A.M.விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக மண்டல மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் திரு K.P.செந்தில் ராஜா மற்றும் BSNLல் பணிநிறைவு பெற்ற தொழில்நுட்பர் திரு.P.வணங்காமுடி ஆகியோர் பங்கேற்று இந்தி எழுத்து போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வாசகப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசளித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சமூக பணியாளர் தகடூர் ந.பிறைசூடன், இந்தி ஆசிரியர்கள் திரு.சன்வர் மீனா மற்றும் திரு.தலிப்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு.E.கபில் தேவ், திரு.முனியப்பன் மற்றும் திரு.ஹரிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.