இந்தியத் தேர்தல் ஆணைய கடித 6600T.23/ID/2021-ERS, நாள்.22.06.2021-இல் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட அறிவுரையினை செயல்படுத்திடும் விதமாக இவ்வலுவலகம் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 342 அரசு -சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் 01.10.2021 முதல் நடைமுறைக்கு வரும். எனவே, அனைத்து வாக்களர்களும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக