Type Here to Get Search Results !

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 14 பதவிகளுக்கான தேர்தல் முன்னேற்பாட்டு ஆய்வு கூட்டம்.

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 14 காலிபதவிகளுக்கான இடங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், இறப்பின் காரணமாக 10 பதவிகளும், இராஜினாமா காரணமாக 3 பதவிகளும், இதர காரணத்தினால் 1 பதவியும் காலியாக உள்ளது. மேற்கண்டவாறு காலியாகவுள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 12 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக மாநிலதேர்தல் ஆணையம் 01.09.2021 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தியது. இதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கண்ட காலிபதவிகளுக்கு தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஆலோசனைக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ். திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.09.2021) நடைபெற்றது.

மாநில தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களது அறிவுரைப்படி மேற்கண்ட காலி பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக வாக்காளர் பட்டியல்கள் 6 ஒன்றியங்களிலும் சம்மந்தப்பட்ட வாக்குப் பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட்டது. அதன்படி மேற்கண்டவாறு தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 14 பதவிகளுக்கு நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 31,037 ஆண் வாக்காளர்களும், 31,060 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 62,097 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு. இராமசந்திரன், தருமபுரி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ், திட்ட இயக்குநர் (மகளிர்திட்டம்) திரு.பாபு, வட்டாரவளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்கள் ) திரு.ஆர்.இரவிச்சந்திரன், ஆகியோர் உட்பட 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884