Type Here to Get Search Results !

கூடு இணைப்பு பணியாளர் திட்டம் சார்பாக HIV நோய் தடுப்பு விழிப்புணர்வு.

தருமபுரி மாவட்டம் கூடு இணைப்பு பணியாளர் திட்டம் சார்பாக HIV நோய் தடுப்பு விழிப்புணர்வு:

தருமபுரி மாவட்டத்தில் கூடு இணைப்பு பணியாளர் (LWS) TANSACS திட்டத்தின் மூலம் 100 ஊராட்சிகளில் HIV நோய் தடுப்பு பணிகளை செய்து வருகிறது. அதனடிப்படையில் இன்று மொரப்பூர் ஒன்றியம், நவலை ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் அக்கிராம மக்களின் மூலமாக கிராம வள வரைபடம் வரையப்பட்டு அம்மக்களுக்கு HIV/AIDS,  AIDS, STI, TB நோய் தடுப்பு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு திட்டம் சார்ந்த தகவல்கள் சேகரிக்கப் பட்டது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட வள அலுவலர் திரு.சுப்ரமணி, சுகாதார  ஆய்வாளர் சீனிவாசன், ஆனந்தகுமார், சுகாதார செவிலியர் தேவகி, ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி அழகரசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவி சங்கர், ஊராட்சி செயலாளர் கணேஷ்மூர்த்தி, ஊராட்சி வார்டு உறுப்பினர் மணி, தூய்மைப் பணியாளர்கள்  இணைப்பு பணியாளர் திட்ட பணியாளர்கள் சந்திரிகா, ராதா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies