தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நளை முன்னிட்டு, அரூர் ரவுண்டானா பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் மூவேந்தன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தீத்து, பே. தாதம்பட்டி, பஞ்சாயத்து தலைவர் பாரதிராஜா, ஆகியோர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்டது அதேபோன்று பொய்யபட்டி ரவுண்டானாவில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி அப்பகுதி மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரூர் தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா, கட்சிப் பொறுப்பாளர்கள் ராஜ்குமார், சந்திரன், திமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், மற்றும் அப்பகுதி அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.