Type Here to Get Search Results !

அரூரில் வரலட்சுமி விரதம் பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன.


தர்மபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் வருடா வருடம்  வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற வரலட்சுமி சிறப்பு பூஜையில் ஸ்ரீ சக்தி அம்மன் பூக்களால் அலங்காரம் செய்து தாலி கயிறு, குங்குமம்,மஞ்சள், வளையல், பழங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 

இந்த பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை கோவில் பூசாரி முருகேசன் செய்திருந்தார். இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies