தருமபுரி மாவட்டம் கட்டரசம்பட்டி கிராமம் இணைந்து தூய்மை இந்தியா திட்ட இருவார விழா கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கட்டரசம்பட்டி கிராமத்தில், நேரு யுவகேந்திரா சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசத் தலைவர்கள் சிலைகள் மற்றும் தெருவை சுத்தம் செய்யும் பணி நடைப்பெற்றது.. இந்த விழாவில் நேரு யுவகேந்திரா அரூர் வட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய்கணேஷ், அருண்குமார் மற்றும் கட்டரசம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் தூய்மை பணிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இறுதியாக நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர்கள் இனிப்பு வழங்கி விழாவை நிறைவு செய்தனர்.