2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 ஆம் ஆண்டில் 1 கோடி புதிய பயனாளிகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டிப்பதாக அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 8 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கும் மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016-ம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் (பட்டியலின, பழங்குடியினர், பிரதமரின் ஆவாஸ் யோஜானா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரவுகள், வனவாசிகள், தீவுகள்) சேர்ந்த சுமார் 5 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது இலக்காக நிர்ணயக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உஜ்வாலா 2.0 திட்டத்தை உத்திரபிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மேலும் ஒரு கோடி பெண்கள் பயன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இந்த அறிவிப்பபை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் சூளகிரி கிளை மேலாளர்.ராமகிருஷ்ணன் அவர்கள் பொதுமக்களுக்கு வீடியோ காட்சிகள் மூலம் ஒளிபரப்பு செய்தார். மேலும் இந்த திட்டத்தில் எப்படி பயன்படுத்துவது பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் பெண்களும் கலந்துகொண்டுனர்.