சிந்தல்பாடி தொங்கனூர் ரயில்வே நிலைய பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. சுற்றுசுவரானது நெடுஞ்சாலையின் அருகில் கட்டப்பட்டு வருவதால் சாலை விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நெடுஞ்சாலை" S " வடிவில் அமைந்துள்ளதால் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன. மேலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பட்சத்தில் சாலையில் எதிரெதிராக வரும் வாகனங்களை பார்க்கமுடியாமல் மோதி விபத்துக்குள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
விபத்துக்களை தவிர்க்கவும் ரயில்வே சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை மாற்றி அமைக்கவும் பொம்மிடி SSE ரயில்வே அதிகாரியிடம் இன்று (11-8-2021) சிந்தல்பாடி ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.