தருமபுரி மாவட்டம் மூக்கனூர் ஊராட்சி தின்னப்பட்டி கிராமத்தில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை அன்று ஊர் மற்றும் நாட்டு மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ மாரியம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள். விழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இளைஞர்கள் மேள தாளங்கள் வாசித்து மக்களை மகிழ்வித்தனர்.
ஊரில் அடுத்த நிகழ்வாக வருகின்ற 22.8.2021 அன்று இளைஞர்கள் பொது தேர்வுக்கு தயாராகும் வகையில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தின்னப்பட்டி மேம்பாட்டு சங்க நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டது.