Type Here to Get Search Results !

கழிவுநீர் பிரச்சனை; ஒன்றிய குழு தலைவர் நேரில் ஆய்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிகுட்பட்ட சூளகிரி ஒன்றியம் சின்னாரன்தொட்டி ஊராட்சி குடிசாதனப்பள்ளி மற்றும் ண்ணீர் குண்டலப்பள்ளி ஆகிய கிராமங்களில் பல வருடங்களாக  கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறோம், என்று கடந்த வாரம் பொதுமக்கள் சூளகிரி ஒன்றிய குழு தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

அதனடிப்படையில் நமது ஒன்றிய குழு தலைவர் திருமதி.லாவண்யா ஹேம்நாத் அவர்கள்  வட்டார வளர்ச்சி  பொரியாளர்களுடன் குடிசாதனப்பள்ளி மற்றும் தண்ணீர் குண்டலபள்ளி ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின், உடனடியாக ஓரிரு வாரங்களில் ஒன்றிய பொது நிதி ஒதுக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் அமைக்க பணிகள் தொடங்கப்படும் என  சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேமதாத் அவர்கள் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி பொரியாளர் தீபாமணி, ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பா, மு.ஊராட்சி மன்ற தலைவர் சீனப்பாகவுடு, ராமகிருஷ்ணப்பா, ராமசந்திரன், கோவிந்தன், முனியப்பா, வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies