அருகில் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாதால் உயிரிழந்த காவல்துறை அதிகாரி மகன்.
தர்மபுரி மாவட்டம் திருப்பத்தூர் நெடுஞ்சாலை அரியகுளம் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகில் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய அதிகாரியின் மகன், கிருஷ்ணாபுரம் காவல் நிலையில் இருந்து தனது அப்பாவை பார்த்துவிட்டு தர்மபுரி நோக்கி வீடு திரும்பியபோது அரியகுளம் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகில் காவல் அதிகாரி மகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், எதிரே வந்த நான்கு சக்கர சரக்கு வாகனமும் மோதிக்கொண்டதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர் ஆனால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சரியான நேரத்தில் வராததால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
அரியகுளம் D. துறிஞ்சிபட்டி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் இருந்திருந்தால் அச்சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர், திருப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் இது போன்ற உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க D. துறிஞ்சிபட்டி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து பொதுமக்களை காப்பாற்றலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.