தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் செல்பி ஸ்பாட் (Selfie spot) -யை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்/வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் செல்பி ஸ்பாட் (Selfie spot)-யை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கு கொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜப்பான் டோக்கியோவில் 23.07.2021 முதல் 08.08.2021 வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கீழ்கண்ட வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
4x400 மீட்டர் தொடரோட்டம்
1. திரு.எஸ்.ஆரோக்கிய ராஜிவ்
2. திரு.நாகநாதன் பாண்டி
4x400 மீட்டர் தொடரோட்டம் கலப்பு பிரிவு
3. செல்வி.தனலஷ்மி சேகர்
4. செல்வி.சுபா வெங்கடேசன்
5. செல்வி.ரேவதி வீரமணி
மேசைப்பந்து
6. திரு.ஜி.சத்தியன்
7. திரு.எ.சரத் கமல்
வாள் சண்டை
8. செல்வி.சி.ஏ.பவானி தேவி
பாய்மரப் படகோட்டுதல்
9. திரு.கே.சி.கணபதி
10. திரு.வருண் எ.தக்கர்
11. செல்வி.நேத்ரா குமணன்
மேற்காண் வீரர்/வீராங்கனைகளில் திரு.எஸ்.ஆரோக்கிய ராஜிவ் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் மற்றும் செல்வி.சுபா வெங்கடேசன் அவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்/வீராங்கனைகள் அனைவருக்கும் தலா ரூ.5.00 இலட்சம் ஊக்கத்தொகையினை தமிழக முதல்வர் அவர்கள் வழங்கி உள்ளார்கள்.
மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகளம், வில்வித்தை, இறகுபந்து, குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்சண்டை, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், வளைகோல்பந்து, ஜுடோ, படகோட்டுதல், பாய்மர படகோட்டுதல், ரோயி துப்பாக்கி சுடுதல், நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் கொள்ளவுள்ளனர்.
இவ்வாறாக விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தருமபுரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பயன்படுத்தி கொண்டு, மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்களது விளையாட்டுத்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் உயர்ந்த இலக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற இலட்சியத்தை மனதில் நிறுத்தி பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு வெற்றி பெற தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான தங்களது முயற்சிகளுக்கு மாவட்ட நிர்வாகமும் மாவட்ட விளையாட்டு துறையும் துணை நிற்கும்.
இதனை நல்ல முறையில் பயன்படுத்தி சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார். இந்நிகழ்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி.பியூலா ஜென் சுசீலா, துணை வட்டாட்சியர் திருமதி.பாரதி, பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


