சென்னை வண்டலூரில் தமிழக காவல்துறை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் நிறைவு அணிவகுப்பு விழா மற்றும் ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி அண்ணாமலைப்பட்டி கிராமம், திரு.சத்யராஜ் குணசேகரன் அவர்கள் குரூப் -I தேர்வில் வெற்றி பெற்று D.S.P பயிற்சி முடித்து தமிழக முதல்வர் அவர்களிடம் பதக்கம் பெற்றார்.