Type Here to Get Search Results !

சேலம் சரக DGP தலைமையில் காவல்துறை-பொது மக்கள் கலந்தாய்வு கூட்டம்

 


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இருளர் காலனி (மடம் சோதனைச்சாவடி)-யில் தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.கு.மகேஸ்வரி.இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.C.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல்துறை-பொது மக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கொரோனா காலத்தில் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த பண்ணவாடி கிராமத்தில் வசிக்கும் சுமார் 75 குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

மேலும் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பேசுகையில் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள கைத்தொழில் தேவையெனில் காவல் துறை மூலமாக தொழில் தொடங்க தருமபுரி மாவட்ட காவல்துறை துணையாக இருப்பதாகவும் மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் புகார் மற்றும் மருத்துவ உதவி போன்றவைக்கு இலவச எண்ணான 181-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார். இந்நிகழ்வில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies