அம்மா திட்டத்தின் மூலம் உள்ளூர் தீவன பொருட்களை கொண்டு அடர் தீவன உற்பத்தி முறைகள் குறித்த பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 ஜூலை, 2021

அம்மா திட்டத்தின் மூலம் உள்ளூர் தீவன பொருட்களை கொண்டு அடர் தீவன உற்பத்தி முறைகள் குறித்த பயிற்சி.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம், தோமலஅள்ளி கிராமத்தில் அம்மா திட்டத்தின் மூலம் உள்ளூர் தீவன பொருட்களை கொண்டு அடர் தீவன உற்பத்தி முறைகள் குறித்த பயிற்சி நடத்தப்பட்டது.

பாவக்கோடு வட்டார அம்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.சித்ரா அவர்கள் பயிற்சியினை தொடங்கி வைத்தார் குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி நிலைய தலைவர். மற்றும் பேராசிரியர் திரு .கண்ணதாசன் அவர்கள் விவசாயிகளிடமிருக்கும் தீவன் பொருட்களை கொண்டு அடர் தீவன உற்பத்தி முறைகள் மற்றும் கால்நடைகளுக்கு தாது உப்பு பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தார். பேலாரஅள்ளி கால்நடை மருத்துவர் திரு .நாகராஜன் அவர்கள் கால்நடைகளை பராமரிக்கும் வழிமுறைகள் மற்றும் அசோலா வளர்புபுகுறித்து விளக்கமளித்தார்.

இப்பயிற்சிக்கு அம்மா திட்ட வட்டார தொழிற்நுட்ப மேலாளர் திருமதி.மகேஷ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னேற்பாடுகள் செய்தனர், மேலும் இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad