Type Here to Get Search Results !

ஒருவழியாக வந்துவிட்டது; நாளை முதல் மீண்டும் இவர்களுக்கும் சேர்த்து!.


தருமபுரி மாவட்டத்தில் போதிய இருப்பு இன்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் நாளை முதல் தொடங்குகிறது என மாவட்ட நிர்வாகம் அதிகாராப்பூர்வமாக அறிவிப்பு, மாவட்டத்தின் ஒன்றியங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்கள் வருமாறு.

இதில் கோவாக்ஸின் 2 ஆம் தவணை மற்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டும் செலுத்தப்படும். கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணைகள் செலுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  1. தருமபுரிக்கு 120 கோவாக்ஸின் மற்றும் 200 கோவிஷீல்டு என மொத்தம் 320 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  2. அரூருக்கு 120 கோவாக்ஸின் மற்றும் 200 கோவிஷீல்டு என மொத்தம் 320 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  3. காரிமங்கலம் பகுதிக்கு 120 கோவாக்ஸின் மட்டும் 200 கோவிஷீல்டு என மொத்தம் 320 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.
  4. மொரப்பூருக்கு 120 கோவாக்ஸின் மற்றும் 200 கோவிஷீல்டு என மொத்தம் 320 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.
  5. நல்லம்பள்ளி மற்றும் அரசு காலை கல்லூரிக்கு 500 கோவிஷீல்டு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. பாலக்கோடு பகுதிக்கு 120 கோவாக்ஸின் மற்றும் 200 கோவிஷீல்டு என 320 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  7. பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு 120 கோவாக்ஸின் மற்றும் 200 கோவிஷீல்டு என 320 தடுப்பூசிகள் ஒதுங்கிடு செய்யப்பட்டுள்ளது.
  8. பென்னாகரம் பகுதிக்கு 120 கோவாக்ஸின் மற்றும் 200 கோவிஷீல்டு என மொத்தம் 320 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் மற்றும் மருத்துவ கல்லூரிக்கு  280 கோவாக்ஸின் மற்றும் 100 கோவிஷீல்டு என மொத்தம் 380 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies