Type Here to Get Search Results !

முன் மாதிரியாக திகழ்ந்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்.

செய்தியாளர் -நாகராஜ் சூளகிரி.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர். லக்ஷ்மிகாந்த் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் மற்றும் 100 நாள் வேலைதிட்டம், மற்றும் கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் வீடுகளில் சென்று கபசரகுடிநீர், மேலும் பொதுமக்கள் ஊராட்சி தேவைகளுக்கு புகார் மனு அளித்தால் நேரடி விசாரித்து குறைகளை போக்கி வருகிறார்.  


மேலும் உத்தனப்பள்ளி ஊராட்சிக்குட்டபட்ட அனைத்து கிராமங்களுக்கும் தன் தீவிர முயற்ச்சியால் தார் சாலை அமைத்து கொடுத்துள்ளார். மற்றும் ஊனமுற்றவர்களுக்கு பல செயற்க்கை கருவிகள் வழங்கியுள்ளார். மேலும் உத்தனப்பள்ளி வருவாயில் பின்தங்கிய கிராமம் என்பதால் தற்போது புதியதாக செயல்ப்பட்டுவரும் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் படித்து வேலையில்லாத நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்ப்படுத்தி தரவும் முயற்ச்சிகள் எடுத்து வருகிறார். மற்றும் அரசு ஒதுக்கிய நிதி ஊராட்சி மன்ற கட்டிடத்திற்க்கு போதுமானதாக இல்லாமல் மேலும் தன் நண்பர்கள் மற்றும் விவசாய பணத்திலும் தன் கூட்டு முயற்ச்சியால் 10இலட்சம் அதிமாக்கி அனைவரும் தாராளமக உக்கார்ந்து பேச உதவிகளை கேட்க வரும் பொதுமக்களுக்கு மிக பிரம்மாண்டமாக கட்டிடத்தை வடிவமைத்து வருகிறார். 


இவரின் சமூக அக்கறை பொதுமக்கள் இவரை சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக பாராட்டி வருகிறார்.  இவர் தன் ஊராட்சி செழிப்படைய மற்றும் நிலத்தடி நீர் அதிகரிக்க உத்தனப்பள்ளி உள்ள ஏரிகளுக்கு நீர் கொண்டுவர பல முயற்சிகள் எடுத்துவருகிறார். இவரை சந்திக்க வரும் பொதுமக்களுக்கு புன் சிரிப்புடன் தனது அலுவலகத்தில் அமரவைத்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்துவருகிறார். மேலும் இவர் தற்போது வரை வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies