விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை.


மரவள்ளி கிழங்கு சாகுபடியில் குறிப்பிட்ட பங்கை கொண்டுள்ள தருமபுரி மாவட்டம், மானாவாரி சாகுபடியாகவும், பாசன சாகுபடியாகவும் பயிரிடப்படுகிறது,  விவசாயிகள் தங்கள் நிலங்களில் கடனை வாங்கி மரவள்ளி கிழங்கு பயிரிட்டு வருகின்றனர், அவர்களின் உழைப்பை காட்டு பன்றிகள் அளித்து வருகிண்டன்றன.


குறிப்பாக இராமியனஹள்ளி போன்ற வனப்பகுதிகள் நிறைந்த பகுதி விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் தொடர்ந்து மாசுபடுத்துகின்றன, இது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறும்போது: நாங்கள் பல ஆண்டுகளாக மரவள்ளி கிழங்கை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றோம், இன்றைய காலகட்டத்தில் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பதும் பெரும் பிரச்னை, உரங்களின் விளையும் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் கடனை பெற்று விவசாயம் செய்துவரும் எங்களுக்கு இந்த காட்டுப்பன்றிகள் பெரும் சோதனையாக உள்ளது, விலை நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அறுவடைக்கு தரைக்கும் நிலையில் உள்ள மரவள்ளி கிழங்குளை சேதம் செய்துவிடுவதால் எங்களை மேலும் பெரும் கவலைக்குள் கொண்டு சென்றுவிடுகிறது, எனவே மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும். என கூறினார்.

இப்பகுதியில் பல ஆண்டு காலமாக மரவள்ளி கிழங்கு மற்றும் நெற்பயிர்கள் பயிரிடுகின்றனர் இதில் காட்டு பன்றிகள் வந்து நெல் பயிர்களையும் மரவள்ளிக்கிழங்கு செடிகளை சேதப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad