பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2021-2022ம் கல்வியாண்டிற்கான 3 ஆண்டு கால பட்டயப் படிப்புக்கான (டிப்ளமோ) சேர்க்கை விண்ணப்பம் இணையதளத்தில் https://www.tngptc.in (or) https://www.tngptc.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கான விடுதி வசதி கல்லூரி அருகிலும், இப்பயிலக வளாகத்திலேயே மாணவியர்களுக்கு பாதுகாப்பான விடுதி வசதி உள்ளது. இதனை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி தருமபுரி பைசுஹள்ளி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பெ.பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் : 25.06.2021
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் : 12.07.2021
தொடர்புக்கு : 04342-293066, 8754998689
.gif)

