Type Here to Get Search Results !

நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

ஒசூரில் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் ஆண்டிற்கு இரண்டு போகம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் 8000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள்  பாசனம் செய்து வருகின்றனர்.

முதல் போக பாசனத்திற்காக ஜூலை மாத இறுதி வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம் என்கிற நிலையில் இன்று கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 135 நாட்கள் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஸ்டாலின் 27ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தார்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று  ஜூலை 28 இன்று கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபாணு ரெட்டி, ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் ஆகியோர் மலர்தூவி நீரை திறந்து வைத்தனர்.

அணையின் மொத்த நீர்மட்ட அளவு 44.28 அடிகளில், தற்போது 41 அடி நீர் இருப்பு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட  தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில்  இன்று முதல் (ஜூலை 28)  டிசம்பர்  மாதம் வரை 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 8000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசனம் பெறும். கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் வலதுபுற கால்வாய் மூலம் 2082 ஏக்கர்களும், இடதுபுற கால்வாயால் 5918 ஏக்கர்களும் பயனடையும்.

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஒசூர் சார்யாட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஏ.சத்யா, ஒன்றிய செயலாளர் சின்ன பில்லப்பா, மா.இ.அமைப்பாளர் சீனிவாசன், கவுன்சிலர்கள் தியாகராஜன், கஜேந்திரன், ஹரேஷ், தலைவர்கள் கிருஷ்ணசாமி, நரேஷ், தமிழக அரசு பொ.ப.து செயற்பொறியாளர் குமார், து.செயற்பொறியாளர் கீதா லஷ்மி, சிவசங்கர், பாசன சங்க தலைவர்கள் நாராயணசாமி, ராஜப்பா, கட்சியனர்,   விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884