தருமபுரி மாவட்டம் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18ஆம் (03.08.2021) தேதி செவ்வாயக்கிழமை தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 07.08.2021 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881 (under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.