Type Here to Get Search Results !

கல்வி கட்டண கொள்ளை; தடுக்க வலியுறுத்தல்.

தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த 2019 மார்ச் மாதத்தில் இருந்து சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் பெரும் தொற்று காரணத்தால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடியே உள்ளன. இன்று வரை கல்வி இணையம் மூலமாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.


அனைத்து மாணவர்களும் இணையவழிக் கல்வி மூலமாகவே பயின்று கொண்டு இருக்கின்றனர். கல்வி நிலையங்களில் 75% கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த 75 சதவீதம் கட்டணம் செலுத்த இயலாமல் மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். இக்கட்டான சூழலில் கூட பெரும்பாலான கல்வி நிலையங்களில் 100% கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இன்றுவரை இந்த கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இன்னுமே பொருளாதார அடிப்படையில் மீண்டு வராத நிலையில் உள்ளனர். தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து பேருந்து கட்டணம், புத்தகங்கள், சீருடைகள், விளையாட்டு சீருடை என அனைத்துக்கும் கட்டணம் வசூலித்துக் கொண்டு இருக்கின்றன. இதனை தடுத்து நிறுத்தி மாணவர்கள், பெற்றோர்கள் நலனை காக்க வேண்டும் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வழிகாட்ட வேண்டும்.


இதனை கண்காணிக்க ஒரு கண்காணிப்புக்குழு ஒன்றினை அமைத்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் புகாரில் கூறி உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies