கிருஷ்ணகிரி அருகே, சொத்தை பிரித்து தராத மாமனாரை தாக்கிய, மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பர்கூர் அருகே, பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியை சேர்ந்தவர் மாரிசெட்டி, 67 வயது; இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சொத்துக்களை பிரித்து கொடுக்குமாறு குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த, 3ம் தேதி, சொத்தை பிரித்துத்தர மறுத்து வந்த மாரிசெட்டியை அவரது மருமகள் ஸ்ரீதேவி, 27, கட்டையால் அடித்து உடனடியாக சொத்தை பிரிக்குமாறு கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாரிசெட்டி தனது மருமகள் மீது காந்திகுப்பம் போலீசாருக்கு புகார் கொடுத்தார், புகார்படி கந்திகுப்பம் போலீசார், ஸ்ரீதேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக