Type Here to Get Search Results !

சாவில் சந்தேகம், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.

பாலக்கோடு, பஞ்சப்பள்ளி அருகே பசிலம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (37) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். தினமும் மாலை வேளையில்  இவர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

கடந்த 30ம் தேதி அன்று வீட்டிற்கு வந்த பண்டியன் திடீரென இறந்து விட்டார். இதனையடுத்து உறவினர்கள் அவரின் உடலை மறுநாள் பசிலம் சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.

இந்த நிலையில் இறந்த பாண்டியன் கடந்த 30ம் தேதி நண்பர்களுடன் மது குடிக்கும்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக பாண்டியனின் மனைவி வைத்தீஸ்வரிக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கணவர் இறப்புக்கு அவரது நண்பர்கள் காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில்  வைத்தீஸ்வரி புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து நேற்று பாண்டியன் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு இஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்–இன்ஸ்பெக்டர் செங்கதிர் மற்றும் தாசில்தார் அசோக்குமார் முன்னிலையில் பாண்டியன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் டாக்டர் மதன்குமார் பிரேத பரிசோதனை செய்தார். அவரது உடல் உறுப்புகள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மீண்டும் பாண்டியன் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies