விளைநிலத்தில் குழாய் பாதிப்பு; விவசாயிகள் எதிர்ப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

விளைநிலத்தில் குழாய் பாதிப்பு; விவசாயிகள் எதிர்ப்பு.

 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெயில் நிறுவனம் சார்பில் பைப்​லைன் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு பைப் மூலம் எரிவாயுவை கொண்டுசெல்லும் பணிகள் கடந்த 3 மாதங்களுக்‍கு முன்பு நடைபெற்றபோது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஜெயசந்திரபானு ரெட்டி பணிகளை நிறுத்த உத்தரவின்பேரில் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் நேற்று மாலை முதல் கெயில் நிறுவனம் தன்னுடைய வேலையை துரிதப்படுத்தியது. 

இதை கண்ட விவசாயிகள் ஓசூர் அருகே குந்துமாரனப்பள்ளி கிராமத்தின் அருகில் பைப்லைன் குழாய் பதிக்கும் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பணிகள் நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் வரும் திங்கள் அன்று ஆலோசனை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad