கடந்த 3 நாட்களாக மொரப்பூர் இந்தியன் வங்கியில் தங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்கள் தங்களின் ஆதார் எண்னையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பதிவு எண்னையும் வங்கி கணக்குடன் இணைக்க கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மறந்து அலைமோதும் பெண்கள் கூட்டம், இது குறித்து பேசிய ஒரு பெண்மணி, நங்கள் 100 நாள் வேலை செய்கின்றோம், எங்கள் ஆதார் எண்னையும், 100 நாள் வேலை எண்னையும் இணைக்க இங்கே காத்திருக்கிறோம்" என கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பில் பணியாற்றும் பெண்கள் தங்களுடைய ஆதார் மற்றும் MGNREGS வேலை அட்டை பதிவு எண்ணையும் இணைப்பதற்கு தினமும் இந்தியன் வங்கிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் இருப்பதால் COVID-19 தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை வங்கி நிர்வாகமும், காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை. விழிப்புணர்வும் ஏற்ப்படுத்தவில்லை. இதற்கு நிர்வாகம் பொருப்பேற்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாற்று வழிமுறைகளை அமல்படுத்தவேண்டும் என்பதே எல்லோர் எதிர்பார்ப்பு.

