Type Here to Get Search Results !

இருவேறு கொள்ளை சம்பவங்கள், மக்கள் அதிர்ச்சி, காவல்துறை விசாரணை.

மொரப்பூர் அருகே வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் பெங்களூருவில் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மொரப்பூர் அருகே குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (34). அரசு பள்ளி ஆசிரியர். இவர் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். 

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 9 சவரன் தங்க  நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

உடனடியாக அவர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடர் திருட்டு அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies