மணல் கடத்தல்; தட்டி கேட்டவருக்கு அடி உதை, மாவட்ட ஆட்சியரிடம் புகார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஜூலை, 2021

மணல் கடத்தல்; தட்டி கேட்டவருக்கு அடி உதை, மாவட்ட ஆட்சியரிடம் புகார்.


நல்லம்பள்ளி அடுத்த ஜீவா நகரில், பெரியநாயகம் என்பவர் வீட்டின் அருகே உள்ள ஏரி மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பெரியண்ணன் ஆகிய இருவரும் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி வாகனங்களில் கடத்தி உள்ளனர்.

இதுகுறித்து பெரியநாயகம் மணல் அள்ளி கடத்துவதை தட்டிக்கேட்டுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் தொடர்ந்து மணல் அள்ளி கடத்தவதை  தெடர்ந்து செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மணல் கடத்தலை  தனக்கு சொந்த பாதை பாதையில் பயன்படுத்த வேண்டாம் என்று பெரியநாயகம் தடுத்துள்ளார்.


இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பெரியண்ணன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து ஆறுமுகத்தை ரத்தம் சொட்ட சொட்ட கடுமையாக தாக்கி உள்ளனர். இதனை தடுத்த பெரியநாயகம் குடும்பத்தினரையும் அவர்கள் தாக்கி உள்ளனர். 


இதனை தொடர்ந்து அப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் இருவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் கொள்ளையர்களால் தங்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பெரியநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad