Type Here to Get Search Results !

அரூர் அருகே இரன்டரை அடியில் பசுமாடு. 7மாத கர்பம்; ஆச்சரியத்தில் கிராம மக்கள்.

அரூர் அருகே இரன்டரை  அடியில் பசுமாடு. 7மாத கர்பம்; ஆச்சரியத்தில் கிராம மக்கள்.

அரூர் அடுத்த பாப்பிசெட்டிப்பட்டி, கிராமத்தில் வசித்து வருபவர் காந்தி, வடிவி தம்பதியினர். இவர்கள் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வளர்த்து வந்த பசுமாடு, வளர்ச்சி குறைவான  கன்று குட்டியை ஈன்றது. இதைப்பார்த்த மாட்டின் உரிமையாளர் காந்தி, வடிவு தம்பதியினர் இது ஒரு அதிசய கன்றுக்குட்டி என்று சந்தோசத்தில் வளர்த்து வந்தார்கள்.


காலப்போக்கிலும் இதனுடைய வளர்ச்சி அதிகரிக்க வில்லை. நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் இதனுடைய வளர்ச்சி உயரம் இரண்டரை அடி மட்டுமே உள்ளது. இப்போது இந்த பசுமாடு 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறது. இந்த பசுமாடு பற்றி கேள்வி பட்டவர்கள் இது ஒரு அரிய வகை அதிசய பசுமாடு என்று கருதி  ரூ.1 லட்சத்திற்கு விலைக்கு கேட்டுள்ளனர்.ஆனால் பசுமாட்டை கொடுக்கவில்லை.


இதுபற்றி மாட்டின் உரிமையாளரிடம் கேட்கும்போது: இந்த மாட்டு கன்று குட்டி பிறந்த போது குறையாக கன்றுக்குட்டி என்றுதான் நினைத்தோம். ஆனால் மாட்டு கன்றுக்குட்டி பிறந்த நாள் முதல் எங்கள் குடும்பத்தில் எந்த ஒரு சண்டை, சச்சரவுகள் இன்றி இன்றுவரை எங்கள் குடும்பத்தி மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து வருகிறோம். ஒரு லட்சத்திற்கு  மேல் பணம்  கொடுத்தாலும் இந்த பசுமாட்டை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று  கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies