Type Here to Get Search Results !

தொப்பூர் கணவாய் சாலையில் 1014 வாகனங்கள் விதிமீறல் ரூ.4,50,600.00 அபராதம்.


தொப்பூர் கணவாயில் அடிக்கடி  நடக்கும் விபத்துகளை தடுக்க அரசும் காவல்துறையும் பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. எனவே அரசு இந்த தொப்பூர் மலைப்பாதையில் எல்லா வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு 30 கி.மீ. என அரசனை வெளியிட்டது.

 

இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை இணைந்து தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேக வரம்பை மீறுகின்ற வாகனங்களை வேக கண்காணிப்பு ரேடார் கருவி மூலம் கண்டறிந்து மின் இரசீது மூலம் அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் வேக கண்காணிப்பு ரேடார் கருவி மூலம் வாகனத்தின் புகைப்படத்துடன் வாகனம் வந்த வேகம் குறிக்கப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன்படி கடந்த 7-ந்தேதி வரை 1,014 வாகனங்களுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திருமதி. ச.திவ்யதர்சினி அவர்கள் கூறுகையில், தொப்பூர் மலைப்பாதையில் வாகனத்திற்கான வேக வரம்பு விதியை மீறியவர்கள் உரிய அபராதத்தை செலுத்தினால் மட்டுமே வாகனங்களுக்கு வரி செலுத்துதல், தகுதிச்சான்று, காப்பு சான்று புதுப்பித்தல், உரிமை மாற்றம், தவணை கொள்முதல் உடன்படிக்கை உள்ளிட்ட அனைத்து பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே தொப்பூர் மலைப்பாதையில் ஓட்டுனர்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies