Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி; தருமபுரி TNTJ அசத்தல்.


தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான‌ கொரானா தடுப்பூசி முகாமில் டிஎன்டிஜே தொண்டர்கள் களமிறங்கி சேவைகளை செய்து வந்தனர் இதில் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக ஆட்டோ மூலம் அழைத்து வருவது திரும்ப கொண்டு போய் வீட்டில் விடுவது இன்னும் வாகனத்தில் இருந்து இறக்கி வாகனத்தில் அவர்களை ஏற்றிவிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை  சிறப்பாக இந்த முகாமில்  தொண்டர்கள் களப்பணி ஆற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஜஹாங்கீர் மாவட்ட பொருளாளர் அன்சர் மாவட்ட துணை செயலாளர் இஸ்மாயில் . சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக மாற்றுத்திறனாளி டிஆர்ஓ செண்பகவல்லி அவர்கள் தவ்ஹீத் ஜமாத் தொண்டர்களுக்கு நன்றி கூறினார்கள்.

மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்அருண்குமார் அவருடைய குடும்ப சூழ்நிலையை கருதி அரிசி ஒரு மூட்டை மற்றும் 600 ரூபாய்க்கு உண்டானமளிகை பொருட்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாவட்ட துணை செயலாளர் சுலைமான் வழங்கினார்கள்.

பாலக்கோடு கிளை சார்பாக இன்று கொரானா எனும் கொடிய நோயிலிருந்து காக்க பொதுமக்கள் 300 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில்  கிளை செயலாளர் பாசில் மற்றும் யாசிர் நயீம் ஆகியோர் கலந்துகொண்டு கபசுர குடிநீர்    வழங்கினார்கள் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி பருகிய தோடு இந்த சேவையை பாராட்டி மகிழ்ந்தார்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies