Type Here to Get Search Results !

அரூரில் காடுகளை அழிக்கும் குடிமகன்கள்.

அரூர் பகுதியின் நுரையீரல் அரூர் காடுகள்.நமது மாவட்டத்திலேயே அதிக மழை அரூரில் பொழிய காரணமும் இந்த காடுகள் தான். இந்த அழகான காடுகளில் மான், மயில், குரங்கு,முயல்,பறவைகள் என பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.நமக்கு சுத்தமான காற்றை தரும் இந்த காடுகளை சிலர் அசுத்தம் செய்கிறார்கள்.


சிலர் குப்பைகளை காடுகளில் கொட்டி வருகிறார்கள. சிந்தல் பாடி சாலையில் காட்டை ஒட்டி டாஸ்மாக் இருப்பதால் மதுபிரியர்கள் பாட்டில்களை சாலையிலும், காடுகளிலும் வீசி விட்டு செல்கின்றனர். பிளாஸ்டிக் காகிதங்களும், கண்ணாடி பாட்டில்களும் தான் அதிகம் காணப்படுகின்றது.


இதை தவிர்க்க டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் மாற்ற வேண்டும்.காட்டில் குப்பை கொட்டுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்.  இதே நிலை நீடித்தால் நமது அடுத்த சந்ததிகளுக்கு பசுமையான காடுகளுக்கு பதில் குப்பை காட்டையும், பிளாஸ்டிக் குவியல் தான் காட்ட வேண்டி இருக்கும்.

டாஸ்மாக் இடத்தை மாற்றாவிட்டால் காடு மதுபிரியர்களில் பாராக தொடர்ந்து செயல்பட்டு காடும்,காட்டு விலங்கும் கொஞ்சம்கொஞ்சமாக அழியும்.அரூர் காடுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களையும்,நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies