Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தருமபுரி மாவட்டத்தில் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவைகளை மக்களுக்கு சிறப்பாக வழங்கிவருகிறது.

அரசு கேபிள் நிறுவனம் இலவசமாக செப்டாப் பாக்ஸ் வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களை 140 ரூபாய் மட்டும் GST உடன் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. அரசு கேபிள் சேவையை பெற விரும்புவோர் அந்தந்த பகுதி அரசு கேபிள் ஆப்பிரேட்டரை தொடர்புகொள்ளவேண்டும். 

அவர்கள் வழங்கவில்லை எனில் 1800 4252 911 அல்லது 1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். ஆப்பிரேட்டர்கள் தங்கள் சுய லாபத்திற்க்காக சந்தாதாரர்கள் விருப்பமின்றி அரசு செப்டாப் பாக்சை நீக்கிவிட்டு தனியார் செட்டாப் பாக்ஸ் பொருத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தினாலோ  அல்லது அரசு கேபிள் சிக்னல் சரியாக வராது என அவதூறு  பரப்பினாலோ ஆப்பிரேட்டர்கள் மீது 1077ல் சந்தாதாரர்கள் புகார் தெரிவிக்கலாம். 

அரசு சிக்னல் எவ்வித சிக்கலுமின்றி சரியாக ஒளிபரப்பாகி வருகிறது. அரசு கேபிள் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் ஆப்பரேட்டர்கள் மற்றும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் மூன்று மாதங்களுக்கு மேல் செயலாக்காமல் இருந்தாலும் அந்த ஆப்பிரேட்டர்கள் மீது நாவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திருமதி. ச. திவ்யதர்ஷினி அவர்கள் தெரிவித்துள்ளார். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies