Type Here to Get Search Results !

தருமபுரியில் 50க்கும் மேற்பட்ட வணிகர் சங்கத்தினர் ரத்ததானம் வழங்கினர்.


தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கம் மற்றும் தர்மபுரி அனைத்து வணிகர் சங்கம் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் இணைந்து  இன்று தர்மபுரி வர்த்தகர் மஹாலில் மாபெரும் ரத்ததான முகாமினை நடத்தினர்.

ரத்ததான முகாமை தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கத் தலைவர் திரு வைத்திலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்,  செயலாளர் திரு கிரிதர், பொருளாளர் திரு ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் திரு மயில்வாகனம் மற்றும் பிரதீப் குமார் உடன் இருந்தனர். 

மேலும் சந்திரமோகன் , வினோத் , கார்த்திகேயன் , ராஜா கிருஷ்ணன் கலந்துக்கொன்டனர்.  

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கியின் மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் ரத்த வங்கியில் பணிபுரியும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ரத்ததான முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் ரத்தம் கொடை அளித்தனர். மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததான முகாம் நடத்துவதாகவும் எங்களது வணிகர்களின் ஒத்துழைப்பு இருக்கும் என்றும் உறுதி அளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies