Type Here to Get Search Results !

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி இராம்நகரில்  அகில இந்திய ஒருமைப்பாடு தினத்தையொட்டி மத்திய  தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சிஐடியூ, எல்பிஎப், எ.ஐ.டி. யூ.சி.   சங்கங்கள் இணைந்து மத்தி யஅரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்ட மசோதக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், பொதுத்துறை மற்றும் அரசு துறைகளை தனியார் மயம்படுத்தும் கொள்கையை கைவிடு கோரியும், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதர விலையை  சட்டபூர்வமாக உறுதிபடுத்த கோரியும், நாளுக்கு  நாள் பெட்ரோல், டீசல், விலை உயர்வு கண்டித்தும், புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிட கோரி, வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்தும் குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500 நிவாரண தொகையும்  ஓவ்வொருவருக்கும் 10 கிலோ உணவு பொருள் வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies