Type Here to Get Search Results !

மூன்றாம் பாலினர்களுக்கு கோவிட்-19 நிவாரண நிதியுதவி.

சமூக நலன் மற்றும் உரிமைத்துறையின் மூலம் அரசாணை நிலை எண்: 22-ன் படி மூன்றாம் பாலினர்களுக்கு கோவிட்-19 நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நாளது தேதி வரை அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினர்களுக்கு அடையாள அட்டை (குடும்ப அட்டை பெறாத) வழங்கி நிதியுதவி வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. ச. திவ்யதர்ஷினி, இ.ஆ.ப, அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினர்களில் நாளது தேதி வரை மூன்றாம் பாலினர் நலவாரிய அடையாள அட்டை பெற்றிடாத மூன்றாம் பாலினர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அடையாள அட்டை பெற தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்டத் தலைவர் திருமதி. ச.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

மாவட்ட சமூக நல அலுவலர், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியரகம் , தருமபுரி, தொலைபேசி எண்கள்: 04346 233088.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies