பி. அக்ரஹாரத்தில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை விழா!
500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் – அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாடு!
பென்னாகரம், நவ. 20: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பி. அக்ரஹாரம் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் குழுவின் சார்பில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ ஐயப்பன் சிலை பிரதிஷ்டை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பி. அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஐயப்ப பக்தர்கள் குழுவினர் ஆண்டுதோறும் சேமித்து வந்த நிதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடைகள் மூலம் ஸ்ரீ ஐயப்பன் சிலையை வடிவமைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிலை பிரதிஷ்டை விழாவிற்கு ஸ்ரீ ராமானந்த சுவாமிகள் தலைமை தாங்கினார். விழாவில் மூலவரான ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர் உள்ளிட்ட இரண்டு அடி உயரம் கொண்ட சுவாமி சிலைகளுக்கு மூலிகைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையடுத்து சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த பிரதிஷ்டை விழாவில் பென்னாகரம், சின்னப்பெரமனூர், சி. புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர் சுவாமிகளை பக்தர்கள் பக்தியுடன் வழிபட்டுச் சென்றனர்.
பி. அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற இந்த சிலை பிரதிஷ்டை விழா பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.


கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக