தருமபுரியில் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்! 20 மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்!
மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டிகளில் 100 மாணவர்கள் பங்கேற்பு – வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் வே.சரவணன் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு!
தருமபுரி, நவம்பர் 18:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் எழுத்தறிவு மன்றத்தின் (District Level Electoral Literacy Club) சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 20 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.சரவணன், இ.ஆ.ப., பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்ட அரங்கில் இன்று (18.11.2026) இப்போட்டிகள் நடைபெற்றன. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை கட்டுரைப் போட்டியும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வினாடி வினா போட்டியும் நடைபெற்றது.
100 மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது அறிவாற்றலையும், தேர்தல் தொடர்பான புரிதலையும் வெளிப்படுத்தினர்.
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
ம.அக்ஷயா, மா.உதயஸ்ரீ, சி.கனிமொழி, அ.சந்தியா, K.மேகனப்பிரியா, ச.கார்த்திகா, ஜெ.ஷர்மிளா, ப.நகுலன், S.பூஜா, நா.சஞ்சனா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
G.ஷன்மதிஸ்ரீ, T.அணுஸ்ரீ, S.வடிவேலன், V.விஸ்ணு, S.ரோஹித், S.சுதர்சனா, M.ரித்திகா, M.சுமன், K.முகேஷ், S.சௌந்தர்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவ்வாறு இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மொத்தம் 20 மாணவ, மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கம்!
இளம் தலைமுறையினரிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் குடிமக்களின் தேர்தல் கடமைகள் குறித்த புரிதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவர்களின் அறிவாற்றல், சிந்தனைத் திறன் மற்றும் ஜனநாயகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் இப்போட்டிகள் அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.செம்மலை, தனி வட்டாட்சியர் (தேர்தல்) இளஞ்செழியன், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக