தருமபுரி மாவட்டத்தில் ரூ.200-க்கு 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள்! – 2,704 தொகுப்புகள் விற்பனைக்கு!
கூட்டுறவுத் துறை சார்பில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஒருங்கிணைந்த மளிகைத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் ச.சரவணன் தகவல்
தருமபுரி, நவ.19:
தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் வழங்கும் நோக்கில், தருமபுரி மாவட்டத்தில் 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொகுப்பு (Consolidated Packet) ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு இந்தத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்?
ஒரு தொகுப்பில் மொத்தம் 1,450 கிராம் எடையிலான 10 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
கடலைப் பருப்பு – 250 கிராம்
பாசிப் பருப்பு – 250 கிராம்
மிளகாய் – 100 கிராம்
தனியா – 150 கிராம்
மஞ்சள் – 150 கிராம்
மிளகு – 250 கிராம்
பூண்டு – 150 கிராம்
புளி – 250 கிராம்
கடுகு – 100 கிராம்
உடைத்த உளுந்தம் பருப்பு – 100 கிராம்
சீரகம் – 50 கிராம்
சோம்பு – 50 கிராம்
தருமபுரி மாவட்டத்தில் 2,704 தொகுப்புகள்
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 2,704 ஒருங்கிணைந்த மளிகைப் பொருட்கள் தொகுப்புகள், ஒரு தொகுப்பு ரூ.200 என்ற விலையில் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளன.
தருமபுரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவைப் பிரிவு, தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள விற்பனை நிலையம் மற்றும் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனைச் சங்கத்தின் சுயசேவைப் பிரிவு ஆகிய இடங்களில் பொதுமக்கள் இந்தத் தொகுப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஒரே தொகுப்பாக குறைந்த விலையில் பெறும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக