Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் கோலாகலமாக நடைபெற்ற 438-ம் ஆண்டு சந்தனக்குட உரூஸ் விழா.


பென்னாகரம், ஆக.13:
 


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சாலை குல்லாத்தரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஹஜ்ரத் அலிப்பீர் காதரி பொக்தாதி கௌவுஸ்கோ ஆல் (ரஹ்) அவர்களின் தர்காவில் 438-ம் ஆண்டு சந்தனக்குட உரூஸ் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சந்தனக்குட ஊர்வலத்தில் பென்னாகரம் பொதுமக்கள், ஊர் பெரியவர்கள், பல்வேறு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பென்னாகரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையேற்றார்.


விழாவின் முக்கிய நிகழ்வாக சந்தனக்குட ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. ஊர்வலம் தர்காவை சென்றடைந்ததும், அங்கு சந்தனம் பூசி சிறப்பு துவா மற்றும் பாத்திஹா நடைபெற்றது. பாத்திஹாவை தொடர்ந்து பொதுமக்களுக்கு தப்ரூக் மற்றும் சந்தனம் வழங்கப்பட்டது. மேலும், புகாராக்களின் ஜர்பாத் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகளும் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


விழாவில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ரோஷன் டிராவல்ஸ் முன்னா, காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், பென்னாகரம் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நடைபெற்ற சந்தனக்குட ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பென்னாகரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.


நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அலிப்பீர் ஜும்லீபீர் புதிய கமிட்டியினர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். ஊர் பொதுமக்கள் மற்றும் கமிட்டி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் 438-ம் ஆண்டு உரூஸ் மற்றும் சந்தனக்குட விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies