Type Here to Get Search Results !

கெலவள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா – மாணவர்களின் பேச்சு, கவிதை, பாடல் நிகழ்ச்சிகள்.


கம்பைநல்லூர், ஆகஸ்ட் 15:
 


தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டாரம், கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக பள்ளி வளாகத்தில் வழிபாட்டு அவை நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இதையடுத்து தேசிய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, கொடிப்பாடல் இனிய இசையுடன் பாடப்பட்டது.


இந்தியாவின் விடுதலைக்காக போராடி இன்னுயிர் ஈந்த தியாகத் தலைவர்களை நினைவுகூரும் வகையில், அவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பள்ளிப் புரவலர், ஊர் பெரியோர்கள், இளைஞர் குழுவினர், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களால் பல்வேறு பேச்சு, கவிதை மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜவஹர்லால் நேரு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மகாகவி பாரதியார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார், காமராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்தும், இந்திய விடுதலை வரலாறு குறித்தும் மாணவர்கள் சிறப்பாகப் பேசினர். மேலும், கவிஞர் மீராவின் விடுதலை நாள் கவிதை உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சிறப்பாக வழங்கினர்.



ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்ததுடன், நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறு, தியாகிகளின் பங்களிப்பு மற்றும் மாணவர்களின் எதிர்கால பொறுப்பு குறித்து சிறப்புரையாற்றினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் சிறப்பு சொற்பொழிவுகளை வழங்கினர். மாணவர்களின் கலைத்திறன் மற்றும் தேசப்பற்று வெளிப்படுத்தப்பட்ட இவ்விழா, அனைவரது பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.


இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு, அனைவரும் மரியாதையுடன் இணைந்து பாடியதைத் தொடர்ந்து 80வது சுதந்திர தின விழா இனிதே நிறைவடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies