Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் விஜய் பிறந்தநாள் விழா: பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்.


பாலக்கோடு, ஜூன் 22:


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலக்கோடு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குமார் தலைமை தாங்கினார். போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சிவசண்முகம், செயலாளர் ராம்பிரபு மற்றும் பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகக் கொடி ஏற்றப்பட்டு, தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராஜா, செல்வராஜ், ராஜசேகர், வினோத்குமார், ரவி, நாகராஜ், சிவக்குமார், முனியப்பன், சுரேஷ், சக்திவேல், ரவிச்சந்திரன், அருள்பிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று விஜயின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies