Hollywood Movies

Breaking News

நாகதாசம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.


பென்னாகரம், செப்.1 (புரட்டாசி 02) -

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், பிளியனூர் மற்றும் தித்தியோப்பனஅள்ளி ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாகதாசம்பட்டியில் நடைபெற்றது.


இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, ஊரக வளர்ச்சி, ஊராட்சி, பேரிடர் மேலாண்மை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, எரிசக்தி, கூட்டுறவு, உணவு பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் நலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, கால்நடை, பால் மற்றும் மீன் வளம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம், சமூக நலன், வேளாண்மை, உழவர் நலத்துறை, ஆதார் சேவை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பொதுமக்களிடமிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி கலந்து கொண்டு மனுக்களை ஆய்வு செய்தார். நிகழ்வில் பாமகவின் ஒன்றியச் செயலாளர் முருகேசன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் வானவில் சண்முகம், மாவட்ட கலை இலக்கிய அணி & பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் போர்வெல் ராஜு, மாவட்ட பிரதிநிதி முனியப்பன், ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், கிளை பிரதிநிதிகள் முனுசாமி, கழக நிர்வாகிகள் கணேசன், முருகன், வைகுந்தன், ஆவின் மணி, தாமோதரன், கிளைச் செயலாளர் விக்கம்பட்டி முனியப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!