Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மை தருமபுரி அமைப்பின் மூலம் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு தையல் இயந்திரம் வழங்கிய BGR மருத்துவமனை.


தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் மை தருமபுரி அமைப்பினர் செய்து வருகின்றனர். கடந்த கோவிட் ஊரடங்கு முதல் மை தருமபுரி அமைப்பிற்கு பல்வேறு வகையான சேவை உதவி, உணவு வழங்கும் சேவைக்கு உதவி வருகின்றனர் BGR மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ். 


பஞ்சபள்ளி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் அம்பிகா என்பவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தையல் இயந்திரம் தேவை என மை தருமபுரி அமைப்பினரிடம் கேட்டிருந்தனர். மகளிர் தினத்தன்று BGR மருத்துவமனை சார்பாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்வில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன், BGR மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் மை தருமபுரி குடும்பத்தினர் இணைந்து தையல் இயந்திரம் வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies