Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு மருத்துவமனை அருகில் டிப்பர் லாரி மோதி பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பாபுசாகிப் தெருவை சேர்ந்த பழ வியபாரி அன்சர் இவரது மனைவி சான்அசின் (வயது.54) இவருக்கு உடல் நிலை சரி இல்லாததால் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பைபாஸ் சாலையில் மருத்துவமனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.


அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த  பாலக்கோடு போலீசார் பெண்மனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies